அசோக்/மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியல்

லயன் காமிக்ஸ் மற்றும் இராணி காமிக்ஸ் தொடங்கிய 1984-ம் ஆண்டில்தான் மேத்தா காமிக்ஸ்-ம் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அசோக் காமிக்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் தொடர்ந்து வந்தது. தரமான காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்ட நிறுவனங்களில் மேத்தா காமிக்ஸ் நிறுவனமும் ஒன்று.
இவர்கடைய நிறுவனத்தில் ஜான் சில்வர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். அச்சித்திர புத்தங்களில் வெளிவந்த இரத்தப் பிசாசு என்ற சித்திரத் தொடருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. எதன் காரணத்தினாலோ மேத்தா காமிக்ஸ் வெளிவராமலே நின்றுவிட்டது.



அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளேன்.
1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்)
2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்)
3. மரணக்கயிறு (ஜான் சில்வர்)
4. மனித வேட்டை (ஜான் சில்வர்)
5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்)
6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்)
7. மரணத்தின் நிழலில் (ஜான் சில்வர்)
8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்)
9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்)
10, பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்)
11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்)
12. சுரங்க வெடி மர்மம் (ஜான் சில்வர்)
13. இரும்புக் கை (ஜான் சில்வர்)
14. மரணக்களம் (ஜான் சில்வர்)
15. நல்லவனுக்கு நல்லவன் (ஜான் சில்வர்)
16. கல் நெஞ்சன் (ஜான் சில்வர்)
17 மர்ம பங்களா (அங்கிள் டெர்ரி)
18 ஆழ்கடல் திருடன் (ஜான் சில்வர்)
19. வைரக் கொள்ளை (ஜான் சில்வர்)
20 இரத்த பூதம் (அங்கிள் டெர்ரி)
21. மர்மத் தீவு (ஜான் சில்வர்)
22. மரண வைரம் (ஜான் சில்வர்)
23. பழி தீர்க்கும் உளவாளி (ஜான் சில்வர்)
24 போலி சுல்த்தான் (ஜான் சில்வர்)
25 மைக்ரோ ப்லிம் மர்மம் (ஜான் சில்வர்)
26 ரகசிய பைல் எக்ஸ் (ஜான் சில்வர்)
27 கடத்தல் மர்மம் (ஜான் சில்வர்)
28 இரத்த கறைகள் (ஜான் சில்வர்)
29 இரகசிய எதிரி (ஜெய்சன் ஒயில்ட்)
30 முகமூடி முரடன் (ஜெய்சன் ஒயில்ட்)


பின்குறிப்பு அசோக்/மேத்தா காமிக்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள சித்திரக் கதை புத்தகங்களில் சில கதைகள் மறுபதிப்பாகவும் வெளியிட்டுள்ளனர்.
அதன் தலைப்புக்கள் ...

1.அரசாங்க ஒற்றன்
2.கொலைகார லீடர்
3.வெடி மண்டல ஒற்றன்
4.இனி ஒரு கொலை
5.ரகசிய உளவாளி
6.துப்பாக்கி முத்தம்
7.மர்ம மாளிகை
8.மரண விளையாட்டு
9.விக்ரமாதித்தன் கதைகள்
10.சர்வதேச உளவாளி        

Comments

  1. ப்ரூனோ ப்ரேசில் நன்பரே, அவ்வளவாக கண்டுகொள்ள படாத (ஆனால் முக்கியமான) காமிக்ஸ் பற்றிய பதிவு. விரைவில் சில கதைகளை பற்றிய விரிவான பதிவிடுங்கள்.
    இந்த வரிசையில் எனக்கு 4 அல்லது 5 புத்தகங்கள் பழையபுத்தக கடையில் கிடைத்தது. லயன்/முத்து/ஆரம்பகால ராணி ஆகிய காமிக்ஸ் போல அசோக்/மேத்தா காமிக்ஸும் தரமான கதை மற்றும் நல்ல மொழிபெயற்ப்புடன் இருந்தது.
    ஜான் சில்வர் கதைகளை படிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.

    அசோக்/மேத்தா காமிக்ஸின் நிறுத்தம் தமிழ் காமிக்ஸ் உலகின் குறிப்பிடதக்க இழப்பு

    (பி-கு) சில புத்தகங்களில் டைனோசர்கள் பற்றிய ஒரு காமிக்ஸ் தொடர் இருந்தது. அதற்கும் இரத்த பிசாசு அட்டை படத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

    ReplyDelete
  2. நண்பரே,

    பட்டியல் வரிசையில் காமிக்ஸ் பதிவுகளையும் இட்டு எங்களை மகிழ்வியுங்கள்.

    ReplyDelete
  3. ப்ரூனோ ப்ரேசில் நண்பரே,

    அசோக் மேத்தா காமிக்ஸின் முழு நீள பட்டியலுக்கு மிக்க நன்றிகள். நண்பர்கள்(?!!?) சிலபேரிடம் வெகுநாட்களாக இதை கேட்டு கேட்டு அலுத்து போயிருக்கிறேன். இப்போது முழு நீள பட்டியலை போட்டு என்னை பரவசபடுத்தி விட்டீர்கள்.

    லயன், முத்து, ராணி காமிக்ஸ் அளவிற்கு இல்லையென்றாலும், அவர்கள் உபயோகபடுத்தாத (இல்லை அதிக உபயோகபடுத்தாத) ஜான் சில்வர், ஜேசன் ஒயில்ட், அங்கிள் டெர்ரி போன்ற அருமையான கதாபாத்திரங்களை சரமாரியாக படைத்த பெருமை மேத்தா காமிக்ஸுக்கு மட்டுமே உண்டு. அவ்விதத்தில் என் நினைவில் தங்கும் ஒரு காமிக்ஸ் பதிப்பகம் என்ற சந்தோஷம் எப்போதும் நிலைக்கும்.

    என்ன அவர்கள் இன்னும் சற்று சிரமம் எடுத்து 30 புத்தகங்களை பலமுறை ரீபிரின்ட் செய்யாமல் புதிய கதைகளை களம் இறக்கி முயற்சித்திருக்கலாமோ என்ற எண்ணம் எப்போதும் மனதில் தங்கி கொண்டே இருக்கும்.

    நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், நம் வாழ்க்கையும் காமிக்ஸ் போன்ற பேன்டசிகளின் கதைகளமாக மாறி விடுமே....

    மற்றவர்களை போல அதிகம் தெரிந்த மேதாவிகள் போல காட்டி கொள்ளாமல், நறுக்கென்று ஒரு வாசகன் என்ற முறையில் புத்தகங்களை விமர்சிக்கும் உங்கள் காதல் அலாதியானது. கூடவே தான் சேர்த்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடும் பாங்கும் உங்களுக்கே அலாதி. பிரதிபலன் பாராத இது போன்ற காமிக்ஸ் காதல், இன்றியமையாதது.

    அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள். அமர்க்களமாக தொடருங்கள்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    பி.கு.: பதிவில் பட்டியலை சற்று மீண்டும் எடிட் செய்து டேபிளில் (HTML Table) அமைத்து வெளியிட முடிந்தால் விரைவு உபயோகத்திற்கு உதவியாக இருக்கும் (பார்க்கவும் கூட). இந்த பட்டியலை கொண்டு என் மேத்தா=அசோக் பட்டியலை திருத்தி கொள்ள அனுமதியையும் இங்கேயே கேட்டு பெற்று கொள்கிறேன்.

    நண்பர் சிவ்: நீங்கள் கூறிய டைனோசார் பற்றிய படங்கள் அடங்கிய வார்த்தை காமிக்ஸ்கள் இடம்பெற்ற தொடரை பற்றியதே இந்த அட்டை. சில இதழ்களில் பின்அட்டைகளில் இந்த வகை சித்திரங்கள் இருந்து, உள்ளே தொடர் என்று இருந்திருக்க பார்த்திருக்கேன். மேத்தா காமிக்ஸ் என்னிடம் முழுமையாக இல்லாதாதால் இந்த தொடரை முழுவதும் படிக்க முடியாமலே போயிற்று. நம் ப்ரூனோ நண்பரிடம் இதை அவர் வலைபக்கத்தில் தொடர்கதையாக வெளியிட ஆவன செய்ய வேண்டும். :)

    ReplyDelete
  4. Dear Bruno,

    It was nice & surprise to see blog on mehta comics. I remember the stories line with john. He was a pilot & the seniors will promise to revoke his pilot license if he does the job. And he does the job...

    The comics quality can be compared to any other top lion-muthu comics. I still have few of them. Its good to see big list. I don't remember much of them.

    Regarding the dinosaur story, yes it was a continuous one. I remember reading it for its nice art.
    Its sad that they didn't continue for long time. If I am right they announced about stopping of comics in editorial of the final issue. They told due to lesser business they doing it. Also they were sad that they are not able to complete reader's favorite dinosaur story.

    Thanks for nice info...

    Dinesh
    (http://www.comicslkg.blogspot.com)

    ReplyDelete
  5. murugan said,
    boss konnutinge.since mullaithangarasan was the editor there is nothing to comment about artwork and transalation.this entire sereies is notable for its strong story lines.i am fortunate for having this entire collection.hats off to you boss.

    ReplyDelete
  6. மேற்கண்ட புத்தகங்கள் இப்போதும்கிடைக்கிறதா ? வாங்குவதற்கான வழிகள்?

    ReplyDelete
  7. This is nice post.All this post is interesting and lovely . I like this all content. Thank,s to the writer for writing this post.
    Pilot license

    ReplyDelete
  8. தேடி ஆராய்ந்து பதிவிட்டமைக்கு நன்றி ஜி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்